பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் எதிர்ப்பாராத பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாகவே கோழி பண்ணை டாஸ்கில் முட்டி மோதி கொண்ட போட்டியாளர்கள், இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் விளையாட்டை ஈடுபாட்டுடன் விளையாடியவர் மற்றும், சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர் யார்? என தேர்வு செய்ததை இன்றைய முதல் இரண்டு புரோமோக்களில் பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், பாலா பிக்பாஸ் டைட்டிலை கை பற்ற எனக்கு தகுதி இல்லை, ஆஜித்துக்கு தகுதி இல்லை என, ஆரி கூறியதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

பின்னர் ஆஜித் 70 நாட்களை கடந்தும் இன்னும் நான் ஈடுபாடு இல்லாமல் விளையாடி வருவதாக ஆரி கூறிய உண்மையை யோசிக்காமல் சில வார்த்தைகளை விடுகிறார். எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல ரம்யாவும் தன்னுடைய பங்கிற்கு ஆரி பற்றி தன்னை பெஸ்ட் என்று காட்டி கொள்வதற்காக அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவத்தாத கூறுகிறார்.

இதை தொடர்ந்து பேசும் பாலாஜி, இதுதான் தனியாக விளையாடும் விளையாட்டு என்றால் நான் குரூப் ஆகி கொள்கிறேன். நான் குரூப்பிஸமே பண்ணிக்கிறேன், தன்னுடைய குரூப்பில் யார் சேர வேண்டுமோ சேரலாம் என அழைப்பு விடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.