ஏற்கனவே இந்த வாரம் பிக்பாஸ் வைத்த கால் சென்டர் டாஸ்கால் பல பிரச்சனைகள் அரங்கேறி வரும் நிலையில், இந்த வாரம் ஜெயிலுக்கு போக, மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்ய சொல்கிறார் பிக்பாஸ்.

இதுகுறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகி, புதிய பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.  இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் வழக்கம் போல் காரணத்துடன் ஒருவரை நாமினேட் செய்கிறார்கள்.  முதலில் சனம் ரியோவை நாமினேட் செய்வது காட்டப்படுகிறது. கால்சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் அனிதா ஆகியோர்களின் நட்பை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரியோவை நாமினேட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனம்ஷெட்டியை அடுத்து வந்த நிஷா,  சனம்ஷெட்டியை நாமினேட் செய்தார். அதேபோல் பாலாஜி ஆரியை நாமினேட் செய்தார். கடைசியில் ஆரி மற்றும் ரியோ இருவரும் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்படுவதால் இவர்கள் இருவரும் மோசமாக விளையாடிய  போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்போது குறுக்கிட்ட சனம், ‘இதில் தனிப்பட்ட பகையும் கலந்திருக்கிறது என்று கூற,முதல் முறையாக நிஷா  உனக்கு என்ன தான் வேணும் சனம் என ரியோ ஜெயிலுக்கு போக உள்ள கோவத்தை இவர் மீது காட்டுகிறார். 

தற்போது வரை பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இல்லை... இல்லை என கூறி கொண்டு, ஒவ்வொரு முறையும் குரூப்பிஸத்தை நிரூபித்து வருகிறது அர்ச்சனா குரூப் என்பதை தெளிவாக தெரிகிறது.