பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அர்ச்சனா குரூப்பிற்கு எதிராக, ஆரியும் - பாலாஜியும் கை கோர்த்தது போல் மூன்றவது புரோமோ வெளியாகியுள்ளது.

அன்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து, சில போட்டியாளர்கள் ஒருவரை ஓருவர் காப்பாற்றி வரும் சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கால் சென்டர் டாஸ்கில் கூட, கேப்ரில்லா மற்றும் சோம் ஆகியோர் விட்டு கொடுத்து விளையாடியது அப்பட்டமாக தெரிந்தது. இத்தனை நாள் குரூப்பிஸம் மட்டுமே உள்ளதாக நினைத்த ஆரி... இந்த அன்பு குரூப் சேப் செய்து விளையாடுவதை இப்போது தான் கண்டுபிடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் ஆரி மற்றும் பாலாஜி உரையாடுகின்றனர். ‘நான் உனக்கு சொல்லும் அட்வைஸ் என்ன வென்றால் உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது. ஓகே ஆனால் அந்த அன்பால் கேம் கேட்டுவிடக்கூடாது. ஆனால் கேமை ஒழுங்காக விளையாடாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தி விளையாடுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப்பை கூறினார்.

இதற்கு பாலாஜி கூறிய போது ’உங்களுக்கும் எனக்கும் ஒரு லெவலுக்கு மேல் பேச ஆள் இருக்காது. அதன் பிறகு தனியாக புலம்ப வேண்டியதுதான் என்று கூறினார். இதனை அடுத்து ஆரி, ‘உனக்காவது ஷிவானி இருக்கா, எனக்கு யார் இருக்காங்க? என்று கூறியபோது கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஷிவானியையும் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள் என்று என்று கூறி இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஷிவானி வழக்கம் போல் எதையோ சாப்பிடு கொண்டிருக்கிறார். இதில் இருந்து, அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு எதிராக ஆரி - பாலாஜி ஆகியோர் கை கோர்த்து அடுத்தடுத்து பல அதிரடி முடிவுகளை எடுப்பார்கள் என தெரிகிறது. என்ன தான் பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.