aarav open talk he is lover
சைத்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தற்போது பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் நடிகர் ஆரவ்.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இரு நாட்களிலேயே நடிகை ஓவியா, ஆரவை காதலிப்பதாக கூறினார். அதற்கு ஆரவ் நான் யாரையும் இதுவரை காதலித்தது இல்லை, எனக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாது என புழுகினார்.
காதலிக்கவில்லை என்று கூறினாலும் சில நாட்கள், ஆரவ் ஓவியாவுடன் சுற்றிக்கொண்டிருந்தார், தற்போது முதல் முறையாக அவருடைய உண்மையான காதலியை பற்றி நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் கூறியுள்ளார். மேலும் தற்போது தான் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார்.
தன்னுடைய காதலி பற்றி அவர் பேசுகையில், எனக்கும் ஒரு காதல் இருக்கு என சொல்ல ஆரம்பித்தவர். நான் காதலித்த இரண்டு வாரத்திற்குள்ளேயே எங்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. காரணம் நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் அதிக கவனம் செலுத்துவேன்... அவளை சுத்தமாக கண்டுக்கொள்ள கூட மாட்டேன் என்பது போல் கூறுகிறார்.
இதனால் மூன்றுமாதம் கழித்து நான் இங்கு கலந்துக்கொள்ள போகிறேன் என்ற தகவலை கூற அவளுக்கு போன் செய்தேன், பல நாட்கள் சென்று மீண்டும் நாங்க பேச தொடங்கியபோது இங்கு வந்து மாட்டிக்கொண்டேன் என வருத்ததோடு கூறி "என்மேல் விழுந்த மழை துளியே" என்கிற பாடலை பாடி தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தினார்.
