விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்,  “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு  தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் அவ்வப்போது காதலருடன் செய்த டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

இந்நிலையில் கடந்த 6 வருடமாக காதலித்து வந்த சதீஷ் என்பவரை பிரேக் அப், செய்து விட்டு... தன்னுடன் 'ராஜா ராணி' சீரியலில் நடித்து வரும் நடிகர் சஞ்சீவ்வை தற்போது இவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.

இதனால் சமீப காலமாக சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் அடிக்கடி ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய காதலை வெளிப்படுத்து வருகிறார்கள்.

அதேபோல் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்போது ஆல்யாவிடம் உங்கள் இருவரின் யார் நன்றாக முத்தம் கொடுப்பார்? என்று ஒரு கேள்வியை கேட்க, அதற்க்கு ஆலியா சற்றும் கூச்சம் இல்லாமல் சஞ்சீவ் தான் என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.