அழகின் மீது அக்கறை காட்டுவது பெண்களின் இயல்பான குணம் என்றே கூறலாம். சிறு முகப்பரு வந்து விட்டாலே முகம் காயமாகிவிடும், என நினைத்து கவலைப்படும் பெண்கள் பலர் உண்டு. சாதாரண பெண்களே இப்படி என்றால் நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.

எப்போதும் கையில் மேக் அப் கிட்டை வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். சிலர் தங்களுடைய அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவும் தயங்குவதில்லை.

இந்நிலையில் தற்போது 'நாகினி' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை 'ஆஷ்கா கொரிடா'. இவர் நாகினி சீரியலில் தேனீக்களின் ராணியாக நடித்து பிரபலமானவர். ஏற்கனவே மிகவும் அழகாக இருக்கும் இவர் தன்னுடைய அழகை மேலும் மேற்கேற்றி கொள்ள உதடை பெரிதாக மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆனால் இவர் எதிர்ப்பார்ப்புக்கு எதிராக மாறிவிட்டது இவரின் உதடு. முன்பு இருந்ததை விட தற்போது அவருடைய உதடு அசிங்கமாக காட்சியளிக்கிறது. இதைப் பார்த்த பலரும் அவரை கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர்.  

சமூக வலைதளங்களில் கூட பலர் ஏன் நன்றாக இருந்த உதடுகளை இப்படி செய்து வைத்திருக்கிறீர்கள்... என ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் அதற்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. விரைவில் ஏதாவது பதில் சொல்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.