Asianet News TamilAsianet News Tamil

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்து வந்த 'சப்தம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் படத்தை தொடர்ந்து, நடிகர் ஆதி நடித்து வந்த, சப்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

aadhi Starring Saptham movie shooting wrapped mma
Author
First Published Sep 27, 2023, 5:18 PM IST

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வந்த திரைப்படம் 'சப்தம்'.

திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் மீண்டும் இணைந்துள்ளதால்,  ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்ப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் சப்தம் படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios