விஜய் ரசிகர்களின் மத்தியில் மெர்சலுக்கு பிறகு பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அரசியல் தான் கதைக்களம் என்பது கூடுதல் சிறப்பு. 

இந்த படத்தில் விஜயின் ஸ்டைலிஷான தோற்றத்தை பார்த்த பிறகு அவர் தொழிலதிபராக நடித்திருக்கிறார், என தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே சமயம் இந்த படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் விஜயின் ரோல் இந்த படத்தின் என்ன என்பதை அறிய பேராவல் கொண்டிருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

சர்கார் படத்தில் அப்டேட் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் தளபதியின் ரசிகர்களுக்கு அவரின் ரோல் என்ன என்பதை அவருடன் சர்கார் படத்தில் நடித்திருக்கும் ராதாரவி தெரிவித்திருக்கிறார். 

சமீபத்திய பேட்டி ஒன்றின் போது சர்கார் படம் குறித்து பேசிய அவர் “விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர். அவரிடம் அது மாதிரியான படங்களை தான் இனி ரசிகர்கள் எதிர்பார்க்க முடியும்”. என தெரிவித்திருக்கிறார்.
மேலும் சர்காரில் விஜயின் கதாப்பாத்திரம் குறித்து பேசும் போது விஜய் இந்த படத்தில் ”ஸோரோ” போன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். என தெரிவித்திருக்கிறார். 

ஸோரோ ஒரு சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம். ஒரு பணக்கார குடும்பத்தை சேந்த ஹீரோ வின் ரகசிய அடையாளம் தான் ஸோரோ. வெளி உலகிற்கு பணக்காரனாக தெரியும் ஒரு நபர், ரகசியமாக ஸோரோ எனும் சூப்பர் ஹீரோவாக முகமூடியுடன் தன அடையாளத்தை மறைத்து கொண்டு மக்களுக்காக போராடுவார் உதவிகள் செய்வார்.

ஏற்கனவே விஜய் சர்காரில் தொழிலதிபராக நடித்திருக்கிறார் எனும் தகவல் வெளியாகி இருந்தது, அதனுடன் இதை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த படத்தில் விஜய் தொழிலதிபராக இருந்தாலும் ரகசியமாக மக்களுக்காக போராடும் ஒரு ஹீரோவாக வருவார் என்று இப்போது ராதாரவியின் பேட்டியின் மூலம் தெரியவந்திருக்கிறது. மொத்தத்தில் சர்கார் ஒரு சூப்பர் ஹீரோ கதை போல இருக்கும் என்றால் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தானே.