Asianet News TamilAsianet News Tamil

13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் படத்தில் இணையும் ஆஸ்கார் நாயகன்...

இதுவரை நடித்திருக்கும் 59 படங்களில் ஜஸ்ட் மூன்றே படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கும் தல அஜீத் 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

a.r.rahman to score music for next ajith movie
Author
Chennai, First Published May 18, 2019, 3:42 PM IST

இதுவரை நடித்திருக்கும் 59 படங்களில் ஜஸ்ட் மூன்றே படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கும் தல அஜீத் 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.a.r.rahman to score music for next ajith movie

‘94 ல் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பவித்ரா’, 2000ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’, 2006ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ’வரலாறு’ ஆகிய மூன்று அஜீத் படங்களில் மட்டுமே அஜீத்தும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜீத் அடுத்து நடிக்கப்போகும் ‘தல 60’ படத்தின் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வியாபார வெளியை இன்னும் விஸ்தரிக்கும் நோக்கில் தயாரிப்பாளர் தரப்பு ரஹ்மான் பெயரை சிபாரிசு செய்திருக்கிறதாம்.a.r.rahman to score music for next ajith movie

ஆனால் இயக்குநர் வினோத்தோ தனது தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு இசையமைத்த ஜிப்ரானை சில தினங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு வரவழைத்து அஜீத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.ஆக யார் பெயரை டிக் அடிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் அஜீத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios