வைரமுத்து மீது சின்மயி புகார் தெரிவித்ததை தொடர்ந்து பலரின் கேள்விகளுக்கும் ஆளாகி இருக்கிறார் சின்மயி. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் பிரஸ்மீட் வைத்து பேசினார். சின்மயி. அப்போது அவரிடம் , நீங்கள் ஏன் வைரமுத்து மீது ஆரம்பத்திலேயே எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த சின்மயி , பயம் காரணமாக தான் அப்போதே இந்த விஷயத்தினை போட்டுடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சின்மயி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதன் மூலம் பிரபலமடைந்தவர் என்பது கூறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹ்னாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அப்போது அவர் வைரமுத்து இப்படிப்பட்டவர் என்பது திரையுலகில் அனைவரும் அறிந்த ஒன்று தான். அவர் பற்றி என்னிடமே பலர் புகார் அளித்திருக்கின்றனர்.

அதே சமயம் சின்மயி அவர் சொல்வது போல் பயந்த சுபாவம் எல்லாம் கிடையாது. ஒரு சமயம் நிகழ்ச்சி ஒன்றை நாங்கள் ஒருங்கிணைத்திருந்த போது , சின்மயி-ன் அம்மா எனக்கு ஃபோன் செய்து “என் மகள் பிரபலமாக இருப்பதால் தான் உங்கள் நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. அவள் பெயரை போட்டதால் தான் உங்கள் கச்சேரிக்கு கூட்டம் வந்தது. 

அவள் பெயரை நீங்கள் பயன்படுத்தி கொள்கிறீர்கள்” என தாறுமாறாக பேசினார். அவர் அப்படி பேசிய போது பதில் கூட சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப்போன ரைஹானா, தன்னிடம் இப்படி அடாவடியாக பேசிய சின்மயி தரப்பினரா , வைரமுத்துவை பார்த்து பயந்தனர் என ஆச்சரியப்பட்டிருக்கிறார்.