‘இந்தியன் 2’ படத்துக்கு தன்னை இசையமைப்பாளராக நியமிக்காத நிலையிலும் ‘மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப்தான்’ என்பதை நிருபிக்கும் வகையில்,  இயக்குநர் ஷங்கருக்காக மாபெரும் சேவை ஒன்றில் இறங்கியிருக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கமலின் முழு நேர அரசியல் பிரவேசத்தால் அவதிக்கு ஆளாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் டிராப் ஆகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அப்படத்தை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருப்பதையும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் ஷங்கரின் இம்முயற்சிக்கு, அவருக்கு தகவல் தெரிவிக்காமலேயே, தனக்கு மிகவும் நெருக்கமான மும்பை நிறுவனம் ஒன்றிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசி வந்தாராம். அது தற்போது ஏறத்தாழ ஓ.கே. ஆகும் நிலைக்கும் வந்துவிட்டதாகத் தகவல். ‘அந்நியன்’ படம் தவிர்த்து மீதி அத்தனைப் படங்களிலும் தன்னையே இசையமைப்பாளராக வைத்துப் படம் இயக்கிய ஷங்கர் ‘இந்தியன் 2’ வில் தன்னை விடுத்து அனிருத்துக்கு வாய்ப்பளித்ததைப் பொருட்படுத்தாமல் இப்படி ஒரு காரியத்தில் ரஹ்மான் இறங்கியிருப்பது அவரது பெரிய மனதைத்தான் காட்டுக்கிறது என்கிறார் தகவலைச் சொன்ன அந்த வி.வி.ஐ.பி.