Asianet News TamilAsianet News Tamil

A. R. Rahman dress: அடேங்கப்பா...லட்ச கணக்கில் ஏலம் போன ஏ . ஆர் ரகுமான் ஒற்றை ஆடை..! எத்தனை லட்சம் தெரியுமா..?

A. R. Rahman dress: மாற்று திறனாளிகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ்  ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதில், அவரது ஆடை ரூ 6.75 லட்சத்திற்கு விற்பனையானது. 

A. R. Rahman dress for sale
Author
Chennai, First Published Mar 23, 2022, 10:34 AM IST

மாற்று திறனாளிகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ்  ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதில், அவரது ஆடை ரூ 6.75 லட்சத்திற்கு விற்பனையானது. 

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளா் ஆவார். உலகளவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவருடைய இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவர்.

A. R. Rahman dress for sale

இசையில் மெய் சிலிர்க்க வைத்தவர்:

 1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு  தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து சாதனை படைத்துள்ளார் ஆஸ்கார் நாயகன்.

A. R. Rahman dress for sale

இரண்டு ஆஸ்கார் விருது பெற்றவர்:

 இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் ஆவார். ஜனவரி 23, 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ''Danny Boyle'' மூலம் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான ''SLUMDOG MILLIONAIRE'' திரைப்படத்திற்கு  இசையமைத்ததற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.மேலும், இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 ஏ.ஆர். ரஹ்மானின் ஆடை பல லட்சத்திற்கு ஏலம்:

சினிமா திரையில்,  27 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை, பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையில் 28 வது தின விழா ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் இந்த ஏலமானது,  நடைபெற்றது.

A. R. Rahman dress for sale

அப்போது, மாற்று திறனாளிகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ்  ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதில், அவரது ஆடை ரூ 6.75 லட்சத்திற்கு விற்பனையானது.  இந்த ஆடையை பிரமோத் சுரடியா என்பவர் இந்த ஆடையை ஏலத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏலத்தில் விடப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க...Kadhal sei movie ban: இளையராஜாவின் ''காதல் செய்'' படத்திற்கு... தணிக்கை குழு போட்ட முட்டு கட்டை..!

Follow Us:
Download App:
  • android
  • ios