‘2.0’ படம் 400 கோடியை சம்பாதித்து மெகா ஜிகா பஸ்டர் ஆன கதை தற்போது சந்தி சிரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானை சிக்க வைத்தது ரஜினிதான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே ரகுமான் தான் இசையமைத்த படங்கள் குறித்து, குறிப்பாக அப்படங்களின் கலெக்‌ஷன் குறித்து எப்போதும் பதிவுகள் போடுவதில்லை. நேற்று முன் தினம் முதல்முறையாக லைகா புரட்க்‌ஷன்ஸ் பிரஸ் ரிலீஸான ‘2.0’ 400 கோடி வசூல் சாதனையை எட்டிவிட்டது என்ற பதிவை தனது ட்விட்டர் கணக்கில் ஷேர் செய்திருந்தார்.

இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சில நண்பர்கள் அவருக்கு போன் போட்டு, படத்தின் மீது விநியோகஸ்தர்கள் கொலைவெறியில் இருக்கும்போது நீங்க இப்பதிவை ஷேர் பண்ணுவது தேவைதானா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ரகுமான் ‘அவரே’ ஷேர் பண்ணச் சொல்லி போன் பண்றப்ப வேற வழி என்று பதிலளித்தாராம். அவர் அவரே என்று சொன்னது அவரையேதான் என்று தெரிகிறது.

இன்னொரு பக்கம் வலைதளங்களில் பலர் 400 கோடி வசூல் மேட்டரை ஷேர் செய்ததற்காக ரகுமானை நேரடியாகவே ஓட்டிவருகிறார்கள். சாம்பிளுக்கு பிரேம்ஜி அமரனின் மீம்ஸ் ஒன்று இங்கே...