’தர்பார்’ படப்பிடிப்பில் இயக்குநர் முருகதாஸின் மனைவியும் அவரது மகளும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

’தர்பார்’ படப்பிடிப்பில் இயக்குநர் முருகதாஸின் மனைவியும் அவரது மகளும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அடுத்த கட்டமாக டெல்லிக்கு ஷிஃப்ட் ஆக இருக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு கடந்த 35 நாட்களாக மும்பையில் ஒரே கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. அக்கல்லூரி வளாகத்தில், தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் லீக்காவது தொடர்பாக மாணவர்களுக்கும் படப்பிடிப்புக் குழுவினருக்கும் இடையில் சிறிய மோதல் நடந்து தற்போது சமரச நிலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினியுடன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் மனைவியும் அவரது குட்டி மகளும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று இரவு முதல் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. இப்புகைப்படங்களை முருகதாஸே வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் என்று தெரிகிறது.