a producer worry about actors

அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்கும் குடும்பத் தயாரிப்பாளராக இருந்தவர் இப்போது இரண்டு ஹீரோக்களும் கழற்றி விட்டதால் தனியாக நிற்கிறாராம். 

பசுமை நிறுவனம் தொடங்கப்பட்டதே அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்காகவும் தான். அவர்களது உறவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொடங்கி நிர்வகித்து வந்தார். பின்னர் திடீர் என்று அண்ணன் நடிகர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார்.

கணக்கு வழக்கு பிரச்னை என்று ஒரு தகவல் வந்தது. அண்ணனுக்கு வந்த கதைகளை தம்பி பக்கம் திருப்பி விட்டார் தயாரிப்பாளர். அதனால் தான் அண்ணன் தனி நிறுவனம் தொடங்கினார் என்றும் சொன்னார்கள். தம்பி நடிக்கும் படங்களை பசுமை நிறுவனம் தயாரித்து வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. தம்பியும் அந்த தயாரிப்பாளரை கழற்றி விட்டார்.

அண்ணனது நிறுவனத்தில் அடுத்து படம் நடிக்கப்போகிறாராம். அறிவிப்பு வந்துவிட்டது. அண்ணன் போனா என்ன தம்பி இருக்கார் என்று தைரியமாக இருந்த தயாரிப்பாளர் இப்போது கவலையில் இருக்கிறாராம்.