‘தளபதி 64’படத்தின் கதை இதுதான் என்று கடந்த இரு வாரங்களாக இணையங்களில் ஒரு கதை நடமாடி வரும் நிலையில் தற்போது அது கமலின் நம்மவர் படத்தின் ரீமேக்தான் எனவும் அவரது அனுமதி பெற்றே இப்படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் பரபரப்பான செய்தி ஒன்று நடமாடுகிறது.

டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் விஜய்யின் ‘தளபதி 64’படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடித்து வருகிறார். கதையின் முதல் சில காட்சிகளில் குடிகார பேராசிரியராக வலம் வரும் விஜய்க்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லப்படுவதாகவும் அந்த ஃப்ளாஷ்பேக்கில் விஜய்க்கு ஒரு முக்கியமான கதை சொல்லப்படுவதாகவும் கதைகள் கிளம்பின.

இந்நிலையில் சமீபத்தைய சில செய்திகள் இப்படம் முழுக்க முழுக்க கமலின் நம்மவர் பட ரீமேக்தான் என்றும் விருமாண்டி படத்தால் உந்துதல் பெற்று ‘கைதி’படத்தை இயக்கியது போலவே நம்மவர் படத்தின் உந்துதலால்தான் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கிவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கமலை லோகேஷ் கனகராஜ் சந்தித்தபோதுதான் அவருக்கு ராஜ்கமல் நிறுவனத்தில் அடுத்த படம் இயக்க அட்வான்ஸ் தரப்பட்டது என்றும் உறுதியாகக் கூறப்படுகிறது. ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் லோகேஷ் கனகராஜ் இதுவரை இச்செய்திக்கு மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ‘94ம் ஆண்டு கமல்,நாகேஷ்,கவுதமி நடிப்பில் வெளியாகியிருந்த நம்மவர் படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியிருந்தார்.