A massive scene in kaala like batsha

ரஜினியை ஒரு மாஸ் தாதாவாக சித்தரித்து, ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத ஒரு படமாக விளங்குவது பாட்ஷா.

ரஜினி நடிப்பு, செண்டிமெண்ட், இசை, மாஸ் திரைக்கதை என அசத்தலான படமாக அமைந்தது பாட்ஷா.

இந்தப் படத்தில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் ஒரு மாஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் படத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் செய்தியை கசிந்துள்ளன.

பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா என பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது ரிலீசாகி ரசிகர்களின் இதயத் துடிப்பை படபடக்க வைக்கிறது.