ரிலீஸான எட்டே நாட்களில் பல தமிழ் சினிமா ரெகார்ட்களை உடைத்துவரும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’தொடர்பான மேக்கிங் வீடியோக்களை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் சண்டைக்காட்சி ஒன்றில் ஷாட் முடிந்ததும் ஸ்டண்ட் கலைஞர்களிடம் அஜீத் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

’நே.கொ.பார்வை’ வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில், சென்னையில் மட்டும் ரூ.8 கோடிக்கும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி கொடுத்துள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்கும், தல அஜித்திற்கும் சூர்யா, ஜோதிகா, ரஜினிகாந்த் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வசூலால் மாபெரும் உற்சாகத்தில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சதா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் புராணம் பாடியபடியே இருக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள தீ முகம் தான் என்ற பாடலின் போது அஜித் சண்டையிடும் காட்சிகளின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அசால்ட்டா ரிஸ்க் எடுக்கும் அஜித் சண்டைக் காட்சிக்குப் பிறகு அடித்து கீழே விழுந்தவரை தூக்கிவிடும் காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.