* பிரபுதேவாவுக்கு தமிழில் தொடர்ந்து செம்ம சரிவுகள். ஒரு படமும் கைகொடுக்காத நிலையில், சல்மானை ஹீரோவாக வைத்து ‘தபாங் 3’ பண்ணியிருக்கிறார். டீசரே அள்ளிக் கொட்டுது வரவேற்பை. தேவா செம்ம ஹேப்பி. அவரது சந்தோஷத்தை டபுளாக்கும் விதமாக அடுத்த படத்தையும் அவருக்கே கொடுக்கிறாராம் சல்மான். 
(ஏனுங்க பிரபு, இதுல ஹீரோயின் தமன்னாவா?)

* ’அசுரன்’ எனும் தரமான படைப்பை தந்திருக்கும் வெற்றிமாறனை தாறுமாறாக தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இந்திய சினிமா. முக்கிய எல்லா மொழிகளிலும் அதை ரீமேக்கிட ஆளாளுக்கு முண்டியடிக்கின்றனர். 
இந்த நிலையில் காமெடி நடிகர் (அப்படியா) சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படமெடுக்க போவதாக அறிவித்திருந்தார் வெற்றி. ஆனால் அவரது இந்த முடிவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே செம்ம எதிர்ப்புகள். ஷாக்காகிவிட்டார் வெற்றி. தயாரிப்பாளரும் யோசிப்பதால் சூரிக்கு யோகம் கஷ்டம்தான். 
(அப்ப வெற்றி பொழச்சாருன்னு சொல்லுங்க)

* கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமானை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ எப்போதோ அபூர்வமாகத்தான் கமலை வைத்தே படம் தயாரிக்கும். ஆனால் தீவிர நடிப்பிலிருந்து ஒதுங்கிவிட்ட கமல்ஹாசன், தன் நிறுவனம் சார்பாக தொடர்ந்து படங்களை தயாரிக்க இருக்கிறாராம். ஹிட் இயக்குநர்கள், டேலண்ட் ஃபுல் நடிகர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்பு இருக்கிறதாம் இங்கே. (வாணி, சரிகா, சிம்ரன், கெளதமி, பூஜாகுமார், ஆண்ட்ரியாவுக்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பீங்களா கமல் சார்?)

* சம்பளம் செட்டிலாகிட்டா போதும், தன்னோட புதுப்படம் எக்கேடு கெட்டு போனாலும் கவலையில்லைன்னு இருக்கிற மாஸ் நடிகர்களுக்கு மத்தியில், சிவகார்த்தியின் ரூட் தனி ரூட்டாக உள்ளது. பேசிய சம்பளத்தில் பாதியை மட்டும் வாங்கிக் கொள்ளும் அவர், மீதியை லாபத்தில் பங்காக கொடுங்க! என்கிறாராம். இது தயாரிப்பாளருக்கு சற்றே இதமாக இருக்கிறதாம். 
(நம்ம வீட்டு பிள்ளதான்யா நீ)

* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மேனன், பிகில் ரிலீஸுக்கு முன்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில் படம் வெற்றியடைய விஜய்க்கு வாழ்த்துக்கள்’ என்று போட்டுவிட்டார். இதற்காக அவரை டாய் டூய் என்று பிரித்து மேய்ந்து கொண்டுள்ளனர் விஜய்யின் ரசிகர்கள். ‘தளபதி!ன்னு போடு’ என்பதுதான் ஒரே கண்டிஷன். மண்டை காய்ந்துடுச்சு மாளவி. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ!