4 குழந்தைகளுக்கு தகப்பன் 2 ஆவது திருமணம்..! முதல்  மனைவி  நேரில் வந்து....

ஊர் கதைகளை வெளிச்சம்  போட்டு காண்பிக்கும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம்   உண்மை...

இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் நடக்கும் பிரச்னை முதல் கள்ளக்காதல் வரை அனைத்தும் இடம் பெறும்

இந்நிலையில்,நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாக உள்ள ஒரு நபரை உடன் பணிபுரியும் ஒரு பெண் காதலித்ததாக தெரிகிறது.

ஆரம்பத்தில் அந்த பெண்ணிற்கு,அந்த நபர் குறித்த முழுவிவரம் தெரியவில்லை.

பின்னர் தெரியவந்தும் கூட, இருவரும் திருமணம்  செய்ய திட்டம் போட்டு உள்ளனர்.

அப்போது,அந்த நபரின் முதல் மனைவிக்கு போன் செய்து  பேசவே, அவர் கொந்தளிக்கும் காட்சி இடம் பெறுகிறது.

 இரண்டாவதாக  திருமணம் செய்ய  திட்டம் போட்ட  அந்த  பெண்ணை  அவருடைய பெற்றோர்கள் அடிப்பதை  பார்க்க   முடிகிறது.இந்த பெண்ணுக்கு  வயதோ 20.

  இரண்டாவது  திருமணம்  செய்ய  திட்டம் போட்ட அந்த  ஆண், தன்னுடைய மனைவி  மற்றும்  நான்கு  குழந்தைகளை  மறந்து  எப்படி  இப்படியெல்லாம்   மனசாட்சியே இல்லாமல்  செய்கிறார்கள் என  நிகழ்ச்சியை  பார்த்த  பொதுமக்கள் கூட  மிகுத்த கவலை  கொள்ள செய்துள்ளனர்.

முதல் மனைவி போனில்...

 நிகழ்ச்சியிலிருந்து முதல் மனைவிக்கு போன் செய்யும் போது,எங்க இருக்கீங்க ...? எங்கு வரவேண்டும் என கேட்க..பல்லாவரம் போலிஸ் ஸ்டேஷன்க்கு அருகில் வர  முடியுமா  என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேட்க.... அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன்..நேரில் வந்து கவனிச்சிக்கிறேன் என கோபமாக போனை வைக்கிறார்....

இவ்வளவு கொடுமைகளை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுகிறார்....

பின்னர் நேரில் வந்த அந்த பெண்மணி,கணவனை போட்டு பிளந்து  கட்டியுள்ளார்... அந்த பெண்ணையும் போட்டு சாத்தி உள்ளார்....

இது போன்ற பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக  நடக்கின்றதை நினைத்து மக்கள்  மனதில் ஒருவிதமான  சங்கடம் ஏற்பட்டு உள்ளது.