பாலிவுட் திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் நடிகை தபு. இவர் தமிழில் 'கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்', 'சிநேகிதியே' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது பாலிவுட் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

மான் வேட்டை புகார்:

இவர் மீது 1998 ஆம் ஆண்டு 'ஹம் சாத் சாத் ஹைன்' என்ற படத்தில் நடித்த போது, மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுடன் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்க்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்திற்கு சென்றார். 

சிலுமிஷம்:

அப்போது ஒரு ரசிகர், தபுவிடம் சிலுமிஷம் செய்துள்ளார். விமான நிலையத்தில் நடந்துக் கொண்டிருந்தபோது, அவருடைய பாதுகாவர்களையும் மீறி ஒரு ரசிகர் தபுவை நெருங்கி சிலுமிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரை பாதுகாவர்கள் பிடித்து வெளியேற்றினர். 

தபு அதிர்ச்சி:

இந்த சம்பவத்தால் தபு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இவருடன் வந்திருந்த நடிகைகள் சோனாலி மற்றும் நீலம் ஆகியோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். 

செம டோஸ் விட்ட நடிகைகள்:

இந்த சம்பவம் குறித்து அந்த மூன்று நடிகைகளும் கூறியபோது, நடிகைகளுக்கு போதுமான பாதிகாப்பு இல்லாதாதால் தான் சில ரசிகர்கள் சிலர் மனிதர்கள் என்பதை மறந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களை எப்படி திருத்துவது ? சிலுமிஷம் செய்த அந்த ரசிகருக்கும் குடும்பம் இருக்கும். சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடம் இப்படி நடந்துக்கொள்வார்களா என்று ஆவேசமாக திட்டியுள்ளனர்.