ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள ‘காஞ்சனா 3’ படம் ஓடும் பெங்களூரு தியேட்டர் ஒன்றில் பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரசிகர் ஒருவர் தியேட்டர் ஊழியர்களால் அடித்தே கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு ஆசின் டவுன் பகுதியைச் சேர்ந்த பரணிதரன்[38] என்பவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா தியேட்டருக்கு ‘காஞ்சனா 3’ படம் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் ஊழியர் செல்வராஜ்[50] அவரிடம் பார்க்கிங் கட்டணமாக ரூ 10 கேட்க, குடிபோதையில் இருந்த பரணிதரன் படம் முடிந்து திரும்பும்போது தருவதாகக் கூறியிருக்கிறார்.

இதையொட்டி இருவருக்கும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறும்போது மற்றொரு தியேட்ட ஊழியரான சேகர் என்பவரும் செல்வராஜுக்கு உதவியாக சேர்ந்துகொள்ள இருவரும் இணைந்து பரணிதரனைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். உடனே போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மயக்க நிலையிலிருந்த பரணிதரன் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜின் நெஞ்சில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளதால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தியேட்டர் ஊழியர்கள் செல்வராஜ், சேகர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். 10 ரூபாய்க்காக தியேட்டர் ஒன்றில் நடந்த இந்தப் படுகொலை பெங்களூருவில் பரபரப்பாகியிருக்கிறது.