வெளியாகி ஐந்தாவது வாரத்தைக்கூட எட்டாத, அதே சமயம் சூப்பர் ஹிட்டாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ‘96 படத்தை தீபாவளியன்று மாலை 6 மணிக்கு சன்.டி.வி. ஒளிபரப்பவிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும்  அதிருப்தி கிளம்பியுள்ளது.

 

மக்களின் இந்த அமோகக்குரலுக்கு மத்தியில் படத்தின் நாயகி த்ரிஷாவும் சன்.டி.வி.க்கு எதிராக போல்டாக களம் இறங்கியுள்ளார். சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ... ‘எங்கள் ‘96 படம் வெளியாகி ஐந்தாவது வாரத்தை மட்டுமே தொட்டிருக்கும் நிலையில் அதை சன்.டி.வி. தீபாவளிக்கு ஒளிபரப்புவது தர்மமாகாது. இத்தனைக்கும் எல்லாதியேட்டர்களிலும் 80 சதவிகித கூட்டம் இருக்கிறது. ப்ளீஸ் படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புங்க சன்.டி.வி’ என்று கோரிக்கை வைத்து #Ban96MoviePremierOnSunTv என்ற ஹேஷ்டேக்கையும் தொடங்கிவைத்திருக்கிறார்.

இன்னொரு சானல் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெலியான ‘இரும்புத்திரை’ படத்தை தீபாவளியன்று ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருந்ததை அடுத்தே சன்.டி.வி. ‘96 படத்தை இப்படி தடாலடியாக ஒளிபரப்ப முடிவு செய்ததாக செய்திகள் நடமடுகின்றன. அப்ப உங்க ‘சர்கார்’ படத்தை பொங்கலுக்கு போடுவீங்களா பாஸ்?