Asianet News TamilAsianet News Tamil

சுடச்சுட தெலுங்கில் ரீமேக்காகும் ’96. அக்கடயும் த்ரிஷாவேதான்!

கடந்த வியாழனன்று ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா காம்பினேஷனின் ’96 படம் சுடச்சுட தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

96 movie remake for thelungu
Author
Chennai, First Published Oct 6, 2018, 5:11 PM IST

கடந்த வியாழனன்று ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா காம்பினேஷனின் ’96 படம் சுடச்சுட தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

வியாழன் காலை முதலே இப்படத்தின் தெலுகு ரைட்ஸை வாங்குவதற்கு நடந்த போட்டியில் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் வென்றார். வியாழன் அன்று ’96 படத்தின் காலைக்காட்சியை சென்னை திரையரங்கில் பிரபல நடிகர் ‘நான் ஈ’ நானியுடன் பார்த்த தில்ராஜ், படத்தை வாங்கப் போட்டியிட்ட அனைத்து தயாரிப்பாளர்களையும் பின்னால் தள்ளி உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கினார்.

96 movie remake for thelungu

தெலுங்கில் இப்படத்தை இயக்க பிரேம் விருப்பம் தெரிவிக்காத நிலையில், இனிதான் இயக்குநர் யார் என்கிற முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஆனால்  விஜய் சேதுபதியின் கேரக்டரில் உறுதியாக நானிதான் நடிக்கவிருக்கிறார் என்றும் இன்னும் சிறப்பாக நாயகிகள் யாரும் அமையாத பட்சத்தில் நாயகி ஜானுவாக அநேகமாக திரிஷாவே நடிக்கக்கூடும் என்றும் தில்ராஜ் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios