ஊரடங்கு உத்தரவால் திரைப்படம் மற்றும் சீரியல் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒளிபரப்ப சீரியல்கள் இல்லாமல் திண்ணாடி வருகிறது தொலைக்காட்சி நிறுவனங்கள்.

இதனை சரிக்கட்ட, ஏற்கனவே இல்லத்தரசிகள் மனதை வென்ற, மெட்டி ஒலி, தங்கம், சித்தி, சக்திமான், மகாபாரதம், போன்ற சீரியல்களை ஒளிபரப்ப தயாராகி வருகிறார்கள். 

ருசி கண்ட பூனை விடாது....  என்பது போல இந்த சீரியல்களை முன்பு பார்த்து ரசித்த இல்ல தரசிகள் மற்றும் எப்போது அம்மாவுடன் அமர்ந்து போர் அடிக்கும் போதெல்லாம் சீரியல் பார்த்து ரசித்த 90 ஸ் கிட்ஸ்சுகளுக்கு இந்த செய்தி காதில் தேன் வார்த்துள்ளது போல் அமைந்துள்ளது.

அதே நேரத்தில், மொபைல், கேம்ஸ் போன்றவற்றை மட்டுமே ரசிக்கும், 2 K  கிட்சுக்கு  இது, மிகவும் கடுப்பான செய்தியாக அமைந்துள்ளது. சீரியல் இல்லை என்றால், டிவியில் வேறு ஏதாவது பார்க்கலாம் என்று பிளான் போட்டு,  எப்போது சீரியல் எபிசோடு காலியாகும் என  எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த செய்து செம்ம கடுப்பை வரவழைக்குமா? இல்லையா?

பத்தும் பத்தாதற்கு... நடுத்தர வயதில் இருக்கும் பிரபலங்கள் பலர், எப்போது சக்திமான்... மகாபாரம் போன்ற சீரியல் ஒளிபரப்பாகும் என காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.