யூடுபில் வெளியிட்ட ஒரே நாளில் 7 லட்சம் பார்வைகளுடனும், நாலாயிரத்துச்சொச்ச ‘நீங்கள்லாம் நாசமாப் போவீங்க’ போன்ற கமெண்டுகளுடனும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் ஓவியா நடிப்பில் வெளிவர உள்ள ‘90 எம்.எல்’ படத்தின் ட்ரெயிலர்.

“குளிர் 100 டிகிரி” திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘90ml'. இந்த படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்க, பெண்கள் பட்டாளத்தையே அவர் வழி நடத்துகிறார். “இந்தப் படம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பற்றிய கதைன்னு சொன்னாலே, ஏதோ தியாகத்தை, சாதனையைப் பற்றி சொல்ல வரேன்னு நினைச்சிக்குவாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்தப் படமும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி பேசினது இல்லை. இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம பேசியிருக்கிறது” என்று சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநர் அனிதா உதீப் சொல்லியிருந்தார். 
 
டிரைலர் தொடங்கும் போதே ஓவியா யாரிடமோ வம்பிழுக்கிறார், “  [ஒரு கெட்டவார்த்தையுடன்’ தா... நான் பிக் பாஸையே பார்த்தவண்டா” என மிரட்டுகிறார். நாங்கு பெண்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கும் போது, அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் பெண்களின் உணர்ச்சிகள் வெளிப்பாடு பற்றியதாக இருக்கிறது. இவர்களின் உரையாடல்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் எதுவும் இடம் பெறவில்லை .மாறாக ஸ்ட்ரெயிட்டாக பச்சை பச்சையாக கொட்டுகிறார்கள்.

18 வயது தொடங்கி 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள். அந்த யூடுப் வீடியோவுக்குக் கீழே உள்ள 4ஆயிரத்துச் சொச்ச கமெண்டுகளில் ‘நாசமாப்போவீங்கடா’வுக்கு அப்புறம் விஜய் தம் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி,ராம்தாஸ் ஐயாக்களைத்தான் விஜய் ரசிகர்கள் அதிகமாக வச்சு செய்திருக்கிறார்கள்.