Asianet News TamilAsianet News Tamil

#83Trailer இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை 83 ட்ரெண்டாகும் டிரெய்லர்!!

83Trailer இந்திய கிரிக்கெட் அணி வென்ற முதல் உலகக்கோப்பை சார்ந்த 83 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

83 movie trailer
Author
Chennai, First Published Nov 30, 2021, 11:54 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் அணியின் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுவது கடந்த  1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியை தன வசம் ஆக்கியதே.  கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி அதுவரை நடைபெற்றிருந்த 2 உலகக் கோப்பைகளையும் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் (Kapil Dev) தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதன்பிறகு கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 

83 movie trailer

இவ்வாறு இந்திய அணி தனது பலத்தை நிலைநாட்ட முதல் உலக கோப்பை மையமாக கொண்ட 83 படத்தை  இயக்குநர் கபீர்கான் (Kabir Khan) இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங் (Ranveer Singh), தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா (Actor Jiiva) உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதைகரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் (Deepika Padukone) உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ’83’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. அத்துடன் டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios