80 actress celebrate re-union meet in chinna

வருடம் தோறும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனைத்து ஹீரோயினிகளும் ஒன்று கூடி (ரீ-யூனியன்) சந்திப்பு என்கிற பெயரில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே, கமலஹாசன் வீடு, மோகன்லால் வீடு, ரம்யா கிருஷ்ணன் வீடு, குஷ்பு வீடு மற்றும் சுஹாசினி வீடுகளில் இந்த ரீ யூனியன் சந்திப்பு ஏற்கனவே நடைபெற்றுள்ளது. கடந்த வருடம் அனைத்து ஹீரோயினிகளும் இந்த வருடம் வெளிநாட்டில் இந்த சந்திப்பு நடத்த வேண்டும் என திட்டமிட்டதாக தெரிகிறது.

இதனால் இந்த வருடம் தங்களுடைய ரீ யூனியன் சந்திப்பை சீனாவில் ஆட்டம், பாட்டம் என கும்மாளம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சீனாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இணையதளத்தில் வெளியிட்டு தங்களுடைய சந்தோஷத்தை தெரிவித்துள்ளனர்.