தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் கோசம் நஞ்சம் இல்லை. அதன் காரணமாகவே இவருடன் மற்ற மொழி திரையுலகை சேர்ந்த, மோகன் லால் போன்ற நடிகர்கள் கூட நடிக்க வாய்ப்பு வந்தால், மறுக்காமல் ஏற்று கொள்வார்கள். ஆனால் 80 களில் ஸ்டார் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது கொரோனா  பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இந்த படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதால், இப்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. 

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது தீவிரமடையும் கொரோனா பிரச்சனைகள் காரணமாக சம்பளத்தில் ஒரு தொகையை குறைத்து கொள்ள வேண்டுமென ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்தது. 

இதையடுத்து முதலில் மறுத்தாலும் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய் மட்டும் விடாப்பிடியாக இருந்த நிலையில், அவருடன் 100 கோடியில் இருந்து, 80 கோடியாக தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், 80 களில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த, மைக் மோகனிடம்... 65 ஆவது படத்தில், விஜய்க்கு தந்தையாக நடிக்க படக்குழு அணுகியதாகவும், இதற்கு மைக் மோகன் அப்படி ஒன்றும் வயது ஆகவில்லை. என கோவப்பட்டு நடிகர் விஜயுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.