பல முன்னனி நடிகர்களும் ஜோடி சேர விரும்பும் நாயகியாக வளம் வருகிறார் நடிகை  நயன்தாரா. ஆனால் அவரோ முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

தற்போது அவர் நடித்து வரும் 'அறம்', 'இமைக்கா நொடிகள்', ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

இந்நிலையில் நடிகர் விஷாலுடன் நயன்தாரா ஒரு புதிய  படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே  கடந்த 2008ஆம் ஆண்டு '  விஷாலுக்கு ஜோடியாக நயன்தாரா சத்யம் படத்தில் நடித்துள்ளார்  மீண்டும்  8 வருடங்களுக்கு பின்னர் இதே ஜோடி  இணைவதாக கூறப்பட்டது.

இந்நிலையில்  இந்த தகவலை முற்றிலும்,  மறுத்துள்ளார் விஷால் .  தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டைக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருவதாகவும் வேறு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என திட்ட வட்டமாக கூறியுள்ளார் விஷால்.