7 star ithu punnagai nagar ani poster release
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, "7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி" என்கிற படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார்.
"7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை,இன்று இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த படம் இளைஞர்களை பற்றியும், விளையாட்டையும் மையப்படுத்தி எடுக்க உள்ளதாகவும் கண்டிப்பாக இந்த படம் இளைஞர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெரும் என்று இந்த படத்தின் இயக்குனர் டான்போஸ்கோ தெரிவித்துள்ளார்.
