தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரகளில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர், இயக்கத்தில் வெளியான, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாகவே அமைந்தது. இவர் சிங்கம் படத்தில், அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்த, நடிகை பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி, 6 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போதும் இளம் காதல் ஜோடிகளாக சுற்றி வருகிறார்கள். அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு சென்று, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிரியா, கர்ப்பமாக உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து, அட்லீ - பிரியா இருவருமே ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லை.

எனினும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அட்லீ - பிரியா தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிரியா சற்று குண்டாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும், சமூகவலைத்தளத்தை வட்டமிட்டு வருகிறது.

இப்படி பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும், அட்லீ - பிரியா உறுதி செய்தால் மட்டுமே இந்த தகவல் நம்பகத்தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. அது வரை காத்திருப்போம்....