Asianet News TamilAsianet News Tamil

45 மணி நேர டாஸ்க்..! காலத்தை வெல்ல களத்தில் குதித்த போட்டியாளர்கள்..! விறுவிறுப்பான புரோமோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மெல்ல மெல்ல 50 ஆவது நாளை நெருங்கி வருகிறது. எனவே டாஸ்குகளும் நாளுக்கு நாள் கடுமையாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், 45வது நாளான இன்று, போட்டியாளர்களுக்கு 45 மணி நேர டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
 

45 hours task in biggboss house first promo released
Author
Chennai, First Published Nov 17, 2020, 11:56 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மெல்ல மெல்ல 50 ஆவது நாளை நெருங்கி வருகிறது. எனவே டாஸ்குகளும் நாளுக்கு நாள் கடுமையாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், 45வது நாளான இன்று, போட்டியாளர்களுக்கு 45 மணி நேர டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

இதுவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடிய டாஸ்குகளை விட இந்த டாஸ்க் மிகவும் கடினமானது என்பதை பார்த்தாலே தெரிகிறது.

45 hours task in biggboss house first promo released

எனவே இந்த டாஸ்க் ஏற்கனவே கொடுத்த டாஸ்குகளை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 மணி நேரம் நடைபெறும் இந்த டாஸ்கில், நேரத்தை சரியாக கணிக்க போட்டியாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

45 hours task in biggboss house first promo released

தண்ணீர் மற்றும் கேஸ் குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தப்படும் என்ற நிலையில் எல்லா வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி துல்லியமாக நேரத்தைக் கணித்து பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பணிகளையும் போட்டியாளர்கள் விரைந்து செய்ய வேண்டும் என போர்டில் எழுதியே கூறப்பட்டுள்ளது.

45 hours task in biggboss house first promo released

இந்த டாஸ்க்கை சரியாக கணித்து காலத்தை வெல்ல போவது யார் என்பது முடிவில்தான் தெரியும். அர்ச்சனா, சோம், நிஷா சமையலில் சுறுசுறுப்பாக இருக்க, ரம்யா உள்பட ஒருசில போட்டியாளர்கள் இடுப்பில் குடத்தை வைத்து தண்ணீர் சேகரிக்க, பாலாஜி டீ காப்பி சுண்டல் சப்ளை செய்ய என அனைவரும் சுறுசுறுப்பாக டாஸ்க்கில் ஈடுபடுவதை பார்க்கும்போது இன்று நிகழ்ச்சியை சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios