நடிகர் சிம்பு, உடல் எடையை கணிசமாக குறைத்த பின்னர்... அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், 'பத்து தல' படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள படம் குறித்த வெளியாகி அவரது ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. 

நடிகர் சிம்பு, உடல் எடையை கணிசமாக குறைத்த பின்னர்... அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், 'பத்து தல' படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள படம் குறித்த வெளியாகி அவரது ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல்லாக வெளியான திரைப்படம் 'ஈஸ்வரன்'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதே நேரத்தில், குறுகிய நாட்களில் சிம்பு இந்த படத்தில் நடித்து முடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும் கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க உள்ளார்.

இதையடுத்து சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைய உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் சிம்பு, மற்றும் அவரது தாயார் உஷா டி.ராஜேந்தர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' , 'அச்சம் என்பது மடமையடா' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது மூன்றாவது முறையாக சிம்புவுக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே போல் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.