3 music directors join in vijaysethupathi maanithan

விஜய் சேதுபதி:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

'தர்மதுரை' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமியுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இவர்களது கூட்டணியில் வெளிவந்த 'தர்மதுரை' திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சதனைப்படைத்ததால் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

3 இசையமைப்பாளர்கள்:

இந்த படத்தில், பத்மவிபூஷன் விருது பெற்று வாழ்த்து மழையில் நனைந்து வரும் இசைஞானி இளையராஜாவுடன் அவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரும் இணைந்து பணியாற்ற உள்ளததாக கூறப்படுகிறது.

தயாரிப்பு:

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

மற்ற தகவல்கள்:

தற்போது படத்தின் பெயர், ஹீரோ, தயாரிப்பு நிறுவனம், மற்றும் இசையமைப்பாளர்கள் தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.