2.o teaser relese ?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் 2.o. இப்படம் 400 கோடி ரூபாய்பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.இந்தப் படத்திற்கு உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் மிகவும் வித்யாசமான வில்லனாக நடித்துள்ளார் என்பது 2.o போட்டோக்களைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். 

ஹீரோயினாக மதராச பட்டினம், ஐ ஆகிய படங்களில் நடித்த எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.

 இந்தப் படத்தின் டீசரை மலேசியாவில் நடக்கும் நட்சத்திர விழாநிகழ்ச்சியில் வெளியிடப் போவதாக தகவல்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்நிலையில், டீசர் வெளியாகவிருப்பதாக வந்த தகவல் வதந்தி என்றும், நட்சத்திர விழா நிகழ்ச்சியில் 2.oவின் பிரத்யேக டி-சர்ட்டுகள் மட்டுமே அறிமுகம் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.