பிரபல ராப் பாடகர், ஜூஸ் வேர்ல்ட் (Juice WRLD ) திடீர் என விமான நிலையத்தில் உயிர் இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராப் பாடல் பாடுவதில் மிகவும் பிரபலமானவர், 21 வயதே ஆகும் சிக்காகோவை சேர்த்த ஜூஸ் வேர்ல்ட். இவர், கடந்த 2 ஆம் தேதி தான் தன்னுடைய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்நிலையில், பிரைவேட் ஜெட் விமானம் மூலம், சிக்காகோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய, ஜூஸ் வால்ட்டிற்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவரின் வாயில் இருந்து ரத்த வாந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவரை, விமானநிலையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் juice wrld இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் உரிய பிரேத பரிசோதனைக்கு பின்னரே, இவரின் இறப்பிற்கான உண்மை தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.