சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் மிகவும் பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் '2.0'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு வருடம் ஆன நிலையில், கிராப்பிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு பின்பு, படப்பிடிப்பை துவங்கிய 'காலா' திரைப்பட குழுவினர் விரைவாக படத்தை முடித்து திரைப்படத்தை வெளியிட்டனர். 'காலா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த வருடமே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட, 2.0 திரைப்படம். பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும், சொன்ன தேதியில் வெளியாகாமல் ரசிகர்களை கவலையடையச் செய்தது. 

இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், '2.0' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் " கிராப்பிக்ஸ் பணி செய்து வரும் நிறுவனம் தங்கள் பணியை முடிக்கும் தேதியை உறுதிபட தெரிவித்துள்ளனர். ஆகவே '2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29 தேதி, ரிலீஸ் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்."

ஏற்கனவே காலா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த வருடத்திலேயே '2.0' திரைப்படம் வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.