2.0 Music launch ceremony

நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் வெளியிடப்பட்ட நிலையில், சேலம் ரஜினி ரசிகர்கள், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தின், இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

2.0 படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக சேலத்தில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில், சேலம் ரஜினி மன்ற மாவட்ட தலைவர் பழனிவேல், ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.