பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

அதிலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படைப்பு என்பதால் கண்டிப்பாக நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

அதில் அக்ஷய் குமாரின் படம் மட்டுமே இருக்கிறது என்றும் ரஜினியின் உருவ படம் இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால் 2.0 என்ற எழுத்தில் முழுவதிலும் குட்டிகுட்டியாக ரஜினியின் உருவம் இருக்கிறது என்பது இதில் இருக்கும் ரகசியம்