2.0 movie photos leeks

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்து 2010 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் "எந்திரன்" .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான " 2 .0 " படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது.

இதன் காரணமாக, படப்பிடிப்பில் செல்போன், மற்றும் கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை அனுமதிக்க படவில்லை. யாரேனும் ஹிட்டன் கேமரா மூலம் பதிவு செய்து வெளியிடுவார்கள் என்பதால் பல்வேறு சோதனைக்கு பின் தான் ஷூட்டிங் ஸ்பாட்க்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே காலா படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் லீக்கானதால் கடும் கோபத்தில் ரஜினி உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது "2 .0" படத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.