rajinikanth movie 2.0 post ponpone
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்து மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2 . 0 திரைப்படம்.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பல கோடி பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 . 0 திரைப்படம் இந்த வருடம் தீபாவளி தினம் அன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஒரு சில படக்காட்சிகளில் படப்பிடிப்பு இருப்பதாலும், உலக தரத்தில் விஎப்எக்ஸ் உருவாக்க உள்ளதால் படத்தின் வெளியீட்டுக்கு தாமதம் ஆகும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.
இதனால், இந்த வருட தீபாளியை இரட்டை தீபாவளியாக கொண்டாடலாம் என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே நிறைந்துள்ளது.
