இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்துக்கொண்டிருக்கும் படம் 2.0. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் பறவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இந்த கதையே நகருமாம், அதாவது அக்ஷய் குமாரின் தோற்றம் இப்படத்தில் பறவை போல் இருந்தது.
மேலும், சமீபத்தில் கூட பறவை போல் வேடமணிந்து ரியாஸ்கான், ரஜினியிடம் சண்டைப்போடுவது போல் ஒரு காட்சியை எடுத்தார்களாம்.
ரசூல் பூக்குட்டி கூட ஒரு பேட்டியில் 2.0 படத்திற்காக காகத்தின் சத்தத்தை பதிவு செய்தது மிகவும் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படத்தில் பறவைகள் வைத்து தான் கதை நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம், படக்குழு அதிகாரப் பூர்வ தகவலை வெளியிடும் வரை.
