2.0 audio lanch spot photos
எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு வரும் 2 .0 படத்துக்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா ஏற்பாடுகள் துபாயில் களைகட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு துபாய் புறப்பட்டுச் சென்ற ரஜினிக்கு அங்கு மிக பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேலும் நாளைய நிகழ்ச்சியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் அனைவரும் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...







