ரஜினி என்ற ஆசிய சூப்பர்ஸ்டாரான கம்பீரமான ஹீரோவுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு  வெறித்தனமான 3 வில்லன் நடிக்கவுள்ளனர். மூன்று வில்லன் என்றால் ஹீரோவிற்கான கதாபாத்திரத்தின் வலிமையை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

யாராலும் அழிக்கமுடியாத வில்லனை அழித்துக்காட்டுவதுதானே கதாநாயகனின் பணியாக இருக்கிறது. அந்தவகையில் ரஜினி என்ற சூப்பர்ஸ்டாருக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல கரடு முரடான வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். அந்தவகையில் பாலிவுட்டில் இஷாக், பாஹி 2ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது.