DON first single one day views : ‘ஜலபுலஜங்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை வெளியான ஒரே நாளில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதகா லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த மாதம் ரிலீசாகி, ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, இதுவரை சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது. 

இதுதவிர அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘ஜலபுலஜங்’ என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலை அனிருத் பாடி உள்ளார். 

 ‘ஜலபுலஜங்’ என்பதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா, அது ஜென்டில்மேன் படத்தில் செந்தில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர். தற்போது அந்த பெயரில் பாட்டை எழுதி உள்ளார் ரோகேஷ். தர லோக்கல் குத்து பாடலான இதற்கு சிவகார்த்திகேயன் நடனமாடும் புரோமோ வீடியோவையும் சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

Scroll to load tweet…

இந்நிலையில் ‘ஜலபுலஜங்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை வெளியான ஒரே நாளில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதகா லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

YouTube video player