படம் 100 நிமிடம் மட்டும் தான்... காதலும் இல்லை காமெடியும் இல்லை.. ஆனால் 2.0 முழுவதும் இதுதானாம்..!
ரஜினி நடித்து பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள படம் 2.0. இந்த படத்தின் கதை என்னவாக இருக்குமென பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி நடித்து பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள படம் 2.0. இந்த படத்தின் கதை என்னவாக இருக்குமென பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது.தொழில் நுட்பம் வளர வளர அதன் தாக்கம் நம்மை பெருமளவில் ஒரு பக்கம் ஈர்த்தாலும் அதன் தாக்கத்தால் பெரும் அழிவையும் சந்தித்து வருகிறது.இந்த உலகம் என்பது தான் உண்மை..அதனை முழுமையாக பிரதிபலிக்கும் ஒரு படமாக 2.0 உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருகி வரும் செல்போன் மூலம் அதன் தாக்கத்தால் குறிப்பிட்ட பறவை இனம் அழிந்து விடுகிறது..அவ்வாறு அழியும் போது அந்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பார்வைக்குள் கிடைகிறது. அந்த பறவை தான் படம் முழுக்க வில்லனாக வருகிறது. அந்த பறவையின் முக்கிய வேலையே, இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர முற்படுவதே.
இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், மாபெரும் சக்தி வாய்ந்த அந்த பறவையிடமிருந்து இந்த உலகை எப்படி காப்பாற்றுவது என களத்தில் இறங்குபவர்தான் சிட்டி ரோபோ. இந்த சிட்டி ரோபோவை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பவர் தான் நம்ம ரஜினிகாந்த். அதாவது வசீகரன். இந்த ரோபோவுக்கும் பறவை வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமார் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போர் தான் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய நடைமுறையில் நாம் அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி உள்ளோம். அதனால் வரக்கூடிய சில பல முக்கிய பிரச்சனைகளை கூட மிக அழகாக தத்ரூபமாக எடுத்து செல்லுமாம் இந்த படம். குறிப்பாக இந்த படத்தில் காதல் காட்சிகள் மற்றும் காமெடி ஒன்னும் அந்த அளவுக்கு இருக்காதாம். மேலும் இந்த படம் வெறும் 100 நிமிடம் மட்டும் கொண்டதாக உள்ளதால், மிகவும் விறு விருப்பாக நகரும் என கூறப்படுகிறது.