Asianet News TamilAsianet News Tamil

2.0’ ஷங்கர், ரஜினி, அக்‌ஷய்குமார், எமிஜாக்‌ஷன் வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நான் சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நடித்தபோது எடுத்த மொத்த நேரத்தையும் விட ‘2.0’ என்ற இந்த  ஒரு படத்துக்கு எடுத்த நேரம் அதிகம்’ என்கிறார் தமிழுக்கு முதல்முறையாக வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இந்தி ஸ்டார் அக்‌ஷய்குமார்.

2.0 Shankar, Rajini, Akshay Kumar, salary how much?
Author
Chennai, First Published Nov 4, 2018, 1:17 PM IST

நான் சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நடித்தபோது எடுத்த மொத்த நேரத்தையும் விட ‘2.0’ என்ற இந்த  ஒரு படத்துக்கு எடுத்த நேரம் அதிகம்’ என்கிறார் தமிழுக்கு முதல்முறையாக வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இந்தி ஸ்டார் அக்‌ஷய்குமார். 2.0 Shankar, Rajini, Akshay Kumar, salary how much?

‘ஒரு நாளைக்கு மேக் அப் போட மூன்றுமணி நேரம் முதல் நான்கு மணிநேரம், அதைக் கலைக்க ஒரு மணிநேரம் என்று இந்தப் படத்துக்காக நான் பட்டபாடு சொல்லிமாளாது. ஆனால் படம் முடிந்து விஷுவல்களைப் பார்த்தபிறகு அந்தக் களைபெல்லாம் பறந்தோடிவிட்டது. இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் நான் கற்றுகொண்டது ஏராளம். ஷங்கரை ஒரு இயக்குநர் என்பதை விட அவர் ஒரு சயிண்டிஸ்ட் என்றே சொல்வேன் ‘ என்கிறார் அக்‌ஷய்குமார்.

 2.0 Shankar, Rajini, Akshay Kumar, salary how much?

‘அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் சிறுவயதிலிருந்தே அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் எனக்கு உண்டு. வாழ்நாளில் சூரியோதயத்தை நான் தரிசிக்காத நாளே இல்லை’ என்கிற அக்‌ஷய்குமாருக்கு இப்போது வயது 51. 2.0 Shankar, Rajini, Akshay Kumar, salary how much?

அது சரி இவ்வளவு அரும்பாடுபட்ட அக்‌ஷய் ‘2.0’ படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 30 கோடி ரூபாய் மற்றும் இந்தி ரைட்ஸில் பார்ட்னர். ரஜினி, ஷங்கர் இருவருக்கும் ஒரே தொகை ஜஸ்ட் 60 கோடி. எமி ஜாக்‌ஷன் சம்பளம்? ஹீரோ மற்றும் டைரக்டரின் சம்பளத்தை இருபதால் வகுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios