ஃபுல் மப்பில் கடைக்குள் உட்கார்ந்தபடி, ‘ப்ரபா ஒயின்ஸ் ஓனருங்களா, கடையை எப்ப சார் திறப்பீங்க? என்று வடிவேலு பாணியில் நேற்று மாலையிலிருந்தே தமிழ் ராக்க்ர்ஸை நோக்கி ‘எப்பய்யா ‘2.0’ ஹெச்.டி. பிரிண்டை ரிலீஸ் பண்ணுவீங்க? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

சொன்ன தேதிக்கு தியேட்டருக்கு படங்கள் வருகிறதோ இல்லையோ சொன்ன நேரத்துக்கு தமிழ் ராக்கர்ஸில் புதுப்படங்களின் ஹெச்.டி. பிரிண்ட் வெளிவந்துவிடும். அதே எதிர்பார்ப்புடன் நேற்று மாலைமுதல் தமிழ்ராக்கர்ஸில் ‘2.0’ படம் வெளியிடப்படும் நேரத்தை மக்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்ராக்கர்ஸில் படம் வெளியாகிவிட்டதாகக் கூறி தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. ஷங்கர்,ரஜினி,லைகா கோஷ்டியினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.