சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான 2.O திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், ரஜினி - ஷங்கர் இணைந்த இந்த படம் தமிழகத்தில் வசூல் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.O படத்திற்கு இல்லை என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இன்ச் இன்ச்சாக செதுக்கியுள்ளதாக பாராட்டி வருகின்றனர். ஹாலிவுட் படத்திற்கு நிகராக இப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக சென்னையில் மட்டும் இப்படம் நேற்று ஒரே நாளில் 2.64 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக இந்த வருட தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படம் 2.34 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் 2.O இந்த சாதனையை முறியடித்துள்ளது.

ஆனால், தமிழகம் மொத்தமாக கணக்கிட்டால், சர்கார் படத்தை காட்டிலும் அதிகமான தியேட்டர்களில் 2.O படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் முதல் நாள் தமிழகத்தில் சுமார் ரூ.13 கோடி அளவில் மொத்த வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர் விநியோக வட்டாரத்தில். சர்கார் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ.31 கோடி. இதனை 2.O படத்தின் முதல் நாள் வசூல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பனிங் இல்லாததால் இது நடக்கவில்லை.